சர்வதேச T20 கிரிக்கட் போட்டியொன்றில் அணியொன்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையை நேபாளம் அணியிடமிருந்து சிம்பாம்வே அணி தட்டிப் பறித்துக்கொண்டது.
இன்று கம்பியா அணிக்கு எதிரான போட்டியிலேயே குறித்த உலக சாதனையை சிம்பாம்வே அணி படைத்துள்ளது.
ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் துணை பிராந்திய ஆப்பிரிக்க குவாலிஃபையர் பிரிவு B இல்(Sub Regional Africa Qualifier Group B) சிம்பாப்வே அணி காம்பியா அணிக்கெதிராக 344 ஓட்டங்களைக் குவித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 43 பந்துகளுக்கு 133 ஓட்டங்களையும், தடிவானாஷே மருமணி 19 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் நேபாளம் அணி 314 ஓட்டங்கள் பெற்றமையே இருபதுக்கு 20 போட்டியில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிக ஓட்டங்களாகும். தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 போட்டியில் அதிக ஓட்டங்கள்- ஜிம்பாப்வே அணி உலக சாதனை சர்வதேச T20 கிரிக்கட் போட்டியொன்றில் அணியொன்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையை நேபாளம் அணியிடமிருந்து சிம்பாம்வே அணி தட்டிப் பறித்துக்கொண்டது.இன்று கம்பியா அணிக்கு எதிரான போட்டியிலேயே குறித்த உலக சாதனையை சிம்பாம்வே அணி படைத்துள்ளது. ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் துணை பிராந்திய ஆப்பிரிக்க குவாலிஃபையர் பிரிவு B இல்(Sub Regional Africa Qualifier Group B) சிம்பாப்வே அணி காம்பியா அணிக்கெதிராக 344 ஓட்டங்களைக் குவித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 43 பந்துகளுக்கு 133 ஓட்டங்களையும், தடிவானாஷே மருமணி 19 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் நேபாளம் அணி 314 ஓட்டங்கள் பெற்றமையே இருபதுக்கு 20 போட்டியில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிக ஓட்டங்களாகும். தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.