குருநாகல் - பிங்கிரியவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய தனியார் ஆடைதொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் விஜேசிறி பசநாயக்க, அஜித் ஜிகான் ஆகிய இருவருக்கும் எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் எட்டு பேரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஆடைதொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டவேளை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கப்பம்பெற முயன்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
ஆடைதொழிற்சாலையின் வாயிலில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதையும்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிரட்டி பணம் பெற்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுவதை காண்பிக்கும் வீடியோவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
முன்னரே திட்டமிட்டிருந்தபடி கலந்துரையாடல் ஒன்றிற்காகவே அங்கு சென்றதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பசநாயக்க தாங்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை குழுவொன்று தவறான விதத்தில் நடந்துகொண்டது என தெரிவித்துள்ளார்.
ஆடைதொழிற்சாலையின் வாகனப்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய நபர்கள், ஏற்கனவே இயங்கிக்கொண்டுள்ள குழுவை அகற்றிவிட்டு போக்குவரத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; ஒருவர் கைது பலரை கைது செய்ய நடவடிக்கை குருநாகல் - பிங்கிரியவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிங்கிரிய தனியார் ஆடைதொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் விஜேசிறி பசநாயக்க, அஜித் ஜிகான் ஆகிய இருவருக்கும் எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் எட்டு பேரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனியார் ஆடைதொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டவேளை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கப்பம்பெற முயன்றனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.ஆடைதொழிற்சாலையின் வாயிலில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதையும்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிரட்டி பணம் பெற்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுவதை காண்பிக்கும் வீடியோவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.முன்னரே திட்டமிட்டிருந்தபடி கலந்துரையாடல் ஒன்றிற்காகவே அங்கு சென்றதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பசநாயக்க தாங்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை குழுவொன்று தவறான விதத்தில் நடந்துகொண்டது என தெரிவித்துள்ளார்.ஆடைதொழிற்சாலையின் வாகனப்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய நபர்கள், ஏற்கனவே இயங்கிக்கொண்டுள்ள குழுவை அகற்றிவிட்டு போக்குவரத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.