17 வருடங்கள் ஆகியும் அப்பாவை விடுவிக்கவில்லை. இந்த அரசாங்கத்திலாவது விடுவிப்பார்களா? என்று மகள் ஒருவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் போராட்டமும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகள் ஒருவர் தனது தந்தையை விடுதலை செய்யுமாறு மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில், அம்மாவின் வயிற்றில் நான் 8 மாசம் இருக்கும் பொழுதே அப்பாவைப் பிடித்து விட்டார்கள். எனக்கு 17 வயது ஆகின்றது. 17 வருடங்களாக தந்தையின் அரவணைப்பின்றி தனியாகவே இருந்துள்ளேன்.
கடந்த 17 வருட கால அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போதைய அரசாங்கத்திலாவது எனது தந்தையை விடுவிப்பார்களா? என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான் வயிற்றிலிருக்கும் போதே அப்பாவை கைது செய்தார்கள் தாயையும் இழந்து 17 வருடங்களாக தந்தையின் விடுதலைக்கு ஏங்கும் மகளின் உருக்கமான கோரிக்கை 17 வருடங்கள் ஆகியும் அப்பாவை விடுவிக்கவில்லை. இந்த அரசாங்கத்திலாவது விடுவிப்பார்களா என்று மகள் ஒருவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் போராட்டமும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகள் ஒருவர் தனது தந்தையை விடுதலை செய்யுமாறு மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில், அம்மாவின் வயிற்றில் நான் 8 மாசம் இருக்கும் பொழுதே அப்பாவைப் பிடித்து விட்டார்கள். எனக்கு 17 வயது ஆகின்றது. 17 வருடங்களாக தந்தையின் அரவணைப்பின்றி தனியாகவே இருந்துள்ளேன். கடந்த 17 வருட கால அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போதைய அரசாங்கத்திலாவது எனது தந்தையை விடுவிப்பார்களா என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.