காஸா மக்களின் அவலநிலை கண்டு எகிப்திலிருந்து உணவுகள் அடங்கிய போத்தல்கள் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.
எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோவைச் சேர்ந்த மக்கள் வெறும் தண்ணீர் போத்தல்களில் அரிசி, பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை நிரப்பி கடல் வழியாக அனுப்பியுள்ளனர்.
கடல் அலைகள் அல்லது நீரோட்டம் மூலம் காசாவுக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் அனுப்பியுள்ளனர்.
பல காலமாக காசா மீது இடம்பெற்று வரும் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
காசா மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்துடன் பசி பட்டினியால் குழந்தைகள், பெண்கள் முதல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அண்மையில் கூட ஏழுபேர் கொண்ட குழுவினர் கப்பலில் உணவுகள் அடங்கிய பொதிகளை காசாவிற்கு எடுத்துச் சென்றனர்.
எனினும் காசாவிற்குச் செல்லும் வழியில் குறித்த கப்பல் மடக்கிப்பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட மோசமான சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையிலேயே அரசாங்கங்களும் அதிகாரிகள் காசா மக்கள் மீது இரக்கம் கொள்ளவில்லை என்று எகிப்திலிருந்து போத்தல்களில் உணவுகள் அடைக்கப்பட்டு கடல் வழியாக காசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
உணவுப் போத்தல்கள் கடல் வழியாக அனுப்பப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இவ்வாறான சூழலிலும் காசா மக்கள் மீது கரிசனை கொண்டு மனிதநேயத்தோடு இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்த எகிப்தியர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எகிப்திலிருந்து காசவுக்கு கடல் அலையில் செல்லும் உணவுகள் மனதை உருக்கும் மனிதநேய செயல் இணையத்தில் வைரல் காஸா மக்களின் அவலநிலை கண்டு எகிப்திலிருந்து உணவுகள் அடங்கிய போத்தல்கள் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோவைச் சேர்ந்த மக்கள் வெறும் தண்ணீர் போத்தல்களில் அரிசி, பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை நிரப்பி கடல் வழியாக அனுப்பியுள்ளனர். கடல் அலைகள் அல்லது நீரோட்டம் மூலம் காசாவுக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் அனுப்பியுள்ளனர். பல காலமாக காசா மீது இடம்பெற்று வரும் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. காசா மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன் பசி பட்டினியால் குழந்தைகள், பெண்கள் முதல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அண்மையில் கூட ஏழுபேர் கொண்ட குழுவினர் கப்பலில் உணவுகள் அடங்கிய பொதிகளை காசாவிற்கு எடுத்துச் சென்றனர். எனினும் காசாவிற்குச் செல்லும் வழியில் குறித்த கப்பல் மடக்கிப்பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட மோசமான சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையிலேயே அரசாங்கங்களும் அதிகாரிகள் காசா மக்கள் மீது இரக்கம் கொள்ளவில்லை என்று எகிப்திலிருந்து போத்தல்களில் உணவுகள் அடைக்கப்பட்டு கடல் வழியாக காசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் போத்தல்கள் கடல் வழியாக அனுப்பப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவ்வாறான சூழலிலும் காசா மக்கள் மீது கரிசனை கொண்டு மனிதநேயத்தோடு இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்த எகிப்தியர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.