• Jul 26 2025

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து - அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jul 25th 2025, 1:49 pm
image


2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று(25) பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இந்தத் தகவலை வழங்கினார்.

2024–2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை புதுப்பிக்க தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) 2,039 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

இதில் 1,820 மருந்தகங்களுக்கே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 219 மருந்தகங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

137 மருந்தகங்களுக்கு நிரந்தர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக, அவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

82 மருந்தகங்களின் உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள், சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியதால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மருந்தகங்கள் பொதுமக்களின் நலனுக்காக இயங்குகின்றன. எனவே, தர நிர்ணயங்களையும், தொழில்முறை வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்காமல் இயங்கும் மருந்தகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறினார்.

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து - அமைச்சர் அறிவிப்பு 2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று(25) பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இந்தத் தகவலை வழங்கினார்.2024–2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை புதுப்பிக்க தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) 2,039 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.இதில் 1,820 மருந்தகங்களுக்கே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 219 மருந்தகங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.137 மருந்தகங்களுக்கு நிரந்தர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக, அவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.82 மருந்தகங்களின் உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள், சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியதால் நிராகரிக்கப்பட்டுள்ளன.மருந்தகங்கள் பொதுமக்களின் நலனுக்காக இயங்குகின்றன. எனவே, தர நிர்ணயங்களையும், தொழில்முறை வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்காமல் இயங்கும் மருந்தகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement