தந்தை - மகன் இடையே ஏற்பட்ட முரண்பாடு வலுப்பெற மகனை தலையணையால் அழுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி அண்ணாநகரில் இடம்பெற்றுள்ளது.
அண்ணாநகரைச் சேர்ந்த 47 வயதான மருதுபாண்டி என்பவர் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் சாலையில் சிமெந்து கடை நடத்தி வருகிறார். இவரது மகன் 23 வயதான தர்மதுரை கூலித்தொழிலாளி ஆவார்.
தர்மதுரைக்கு மது பழக்கம் இருந்ததாகவும், வேலைக்குச் செல்லாமல் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி வீட்டில் மருதுபாண்டி மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் மது அருந்த பணம் கேட்டு தந்தையை தொந்தரவு செய்து தாக்க முயன்றார்.
இதனையடுத்து ஆவேசமடைந்த தந்தை, மகனை கீழே தள்ளினார். அப்போது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
உயிரிழந்த தர்மதுரையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ அறிக்கை பொலிஸாரிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறித்த நபர் மூச்சுவிட முடியால் அமுக்கப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
அதன்பின்னர் தந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், மகனை தலையணையால் அழுத்திக் கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தந்தையான மருதுபாண்டியை பொலிஸார் கைது செய்தனர்.
தலையணையால் அழுத்தி மகனைக் கொன்ற தந்தை; தந்தை கைது தந்தை - மகன் இடையே ஏற்பட்ட முரண்பாடு வலுப்பெற மகனை தலையணையால் அழுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி அண்ணாநகரில் இடம்பெற்றுள்ளது. அண்ணாநகரைச் சேர்ந்த 47 வயதான மருதுபாண்டி என்பவர் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் சாலையில் சிமெந்து கடை நடத்தி வருகிறார். இவரது மகன் 23 வயதான தர்மதுரை கூலித்தொழிலாளி ஆவார். தர்மதுரைக்கு மது பழக்கம் இருந்ததாகவும், வேலைக்குச் செல்லாமல் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி வீட்டில் மருதுபாண்டி மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் மது அருந்த பணம் கேட்டு தந்தையை தொந்தரவு செய்து தாக்க முயன்றார்.இதனையடுத்து ஆவேசமடைந்த தந்தை, மகனை கீழே தள்ளினார். அப்போது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். உயிரிழந்த தர்மதுரையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ அறிக்கை பொலிஸாரிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறித்த நபர் மூச்சுவிட முடியால் அமுக்கப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.அதன்பின்னர் தந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், மகனை தலையணையால் அழுத்திக் கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தந்தையான மருதுபாண்டியை பொலிஸார் கைது செய்தனர்.