• Mar 28 2026

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை!

shanu / Mar 27th 2026, 11:40 am
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய 10 மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்று (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


மேலும் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய 10 மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்று (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement