• May 08 2026

இலங்கைக்கு கடத்தவிருந்த 100 கிலோ கஞ்சா;இந்தியாவில் பறிமுதல்!

Ziya / Dec 19th 2025, 2:56 pm
image

இந்தியா தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியை அடுத்த புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிப்காட் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

நேற்று அதிகாலை சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனா். 

அவ்வழியே வந்த காா், 2 பைக்குகளை நிறுத்திய போது அவற்றில் வந்த 4 பேரில் மூவா் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த 33 வயதானவர் இதன்போது கைது செய்யப்பட்டார். 

இவா்கள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மற்றொரு கும்பலிடம் கொடுப்பதற்காக 100 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கொண்டுவந்ததாகத் தெரியவந்தது.

அதன் மொத்த மதிப்பு 1 கோடி இந்திய ரூபாய் எனக் கூறப்படுகிறது. 

சந்தேகநபரை இதன்போது கைது செய்த பொலிஸார், கஞ்சா மூட்டைகள், வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். 

 தப்பியோடிய 3 சந்தேக நபர்களை  பொலிஸார் தேடிவருகின்றனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 100 கிலோ கஞ்சா;இந்தியாவில் பறிமுதல் இந்தியா தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியை அடுத்த புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிப்காட் பகுதியிலிருந்து கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த காா், 2 பைக்குகளை நிறுத்திய போது அவற்றில் வந்த 4 பேரில் மூவா் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த 33 வயதானவர் இதன்போது கைது செய்யப்பட்டார். இவா்கள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மற்றொரு கும்பலிடம் கொடுப்பதற்காக 100 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கொண்டுவந்ததாகத் தெரியவந்தது.அதன் மொத்த மதிப்பு 1 கோடி இந்திய ரூபாய் எனக் கூறப்படுகிறது. சந்தேகநபரை இதன்போது கைது செய்த பொலிஸார், கஞ்சா மூட்டைகள், வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.  தப்பியோடிய 3 சந்தேக நபர்களை  பொலிஸார் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

Advertisement