• Nov 25 2024

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு! அனுர சூளுரை

Chithra / Aug 21st 2024, 8:39 am
image

 

தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறியவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும்.

ஊழல் மோசடிகளை இல்லதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய பொருளாதாரம், சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும்.செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு அனுர சூளுரை  தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறியவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும்.ஊழல் மோசடிகளை இல்லதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கிராமிய பொருளாதாரம், சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.மின்சார கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும்.செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement