ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலாகுமா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியாதென்றும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்.
மேலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியே அதனைத் தீர்மானிக்க வேண்டும்.
இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறமுடியாது. எனவே, அரசாங்கம் அப்படியொரு தீர்மானத்தை அறிவிக்குமென்றால் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போமென்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊரடங்கு சட்டம் குறித்து பொலிஸார் விசேட அறிவிப்பு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலாகுமா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியாதென்றும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்.மேலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியே அதனைத் தீர்மானிக்க வேண்டும்.இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறமுடியாது. எனவே, அரசாங்கம் அப்படியொரு தீர்மானத்தை அறிவிக்குமென்றால் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போமென்றும் குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.