மன்னார் மாவட்டத்தில் இன்று (14) தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 06 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கொண்டவாரு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அதே நேரம் இது வரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று (14) வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 06 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
மன்னாரில் இன்று 06 தேர்தல் முறைப்பாட்டு சம்பவங்கள் பதிவு மன்னார் மாவட்டத்தில் இன்று (14) தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 06 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கொண்டவாரு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.அதே நேரம் இது வரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று (14) வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 06 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.