• Nov 24 2024

10 ஆவது பொதுத் தேர்தல் - புத்தளத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

Tamil nila / Nov 13th 2024, 8:20 pm
image

நாளை (14) நடைபெறவுள்ள 10 ஆவது பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் புத்தளம் மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.


அந்த வகையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு சீட்டுகள் அடங்கிய அதிகாரிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை 9.00 மணி முதல் புத்தளம் நகரில் உள்ள மூன்று நிலையங்களில் இருந்து அனுப்பபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதில் புத்தளம் செந் அன்றூஸ் மத்திய மகா வித்தியாலயம்,பாத்திமா பாலிக்க மகா வித்தியாலயம் மற்றும் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை அகியவற்றில் இருந்து 470 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு சீட்டுகள் என்பன பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.


வாக்குப் பெட்டிகள் அனுப்பும் மூன்று நிலையங்கள் மற்றும் அதனை அண்டி பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைளும் இடம் பெற்றது. 

புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம், ஆனமடு சிலாபம் , நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ ஆகிய தொகுதிகளில் 6 இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



10 ஆவது பொதுத் தேர்தல் - புத்தளத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி நாளை (14) நடைபெறவுள்ள 10 ஆவது பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் புத்தளம் மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.அந்த வகையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு சீட்டுகள் அடங்கிய அதிகாரிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை 9.00 மணி முதல் புத்தளம் நகரில் உள்ள மூன்று நிலையங்களில் இருந்து அனுப்பபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதில் புத்தளம் செந் அன்றூஸ் மத்திய மகா வித்தியாலயம்,பாத்திமா பாலிக்க மகா வித்தியாலயம் மற்றும் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலை அகியவற்றில் இருந்து 470 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு சீட்டுகள் என்பன பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.வாக்குப் பெட்டிகள் அனுப்பும் மூன்று நிலையங்கள் மற்றும் அதனை அண்டி பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைளும் இடம் பெற்றது. புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக புத்தளம், ஆனமடு சிலாபம் , நாத்தாண்டி மற்றும் வென்னப்புவ ஆகிய தொகுதிகளில் 6 இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement