திருகோணமலை - கிண்ணியா கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவில் கழிவறைக் கூடங்களை நிர்மாணிப்பதற்கு 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவில் கழிவறைக் கூடங்களை நிர்மாணிப்பதற்கான இடத்தினை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை இன்று (12) மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்பி வருகின்ற ஓர் இடமாக இருந்தாலும், நீண்ட காலமாக, அடிப்படை வசதிகள் இன்றி, கவனிப்பாரற்ற நிலையிலே இந்தப் பொழுது போக்கு பூங்கா காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கிண்ணியா நகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஈ. எம்.ராபியின்
வேண்டுகோளுகிணங்க, குறித்த பகுதியில் கழிவறைக் கூடங்களை அமைக்க 30 மில்லியன் ரூபா நிதியினை சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.
எதிர்காலத்தில், நிலாவெளி, பளிங்கு கடற்கரை ஆகியவற்றோடு, கிண்ணியா கடற்கரை பூங்காவையும் உல்லாச பயணிகளை மேலும் கவரும் வண்ணம், நவீன வடிவில் மாற்றி அமைக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்தார்.
குறித்த விஜயத்தில் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா கடற்கரைப் பூங்காவிற்கு 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு திருகோணமலை - கிண்ணியா கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவில் கழிவறைக் கூடங்களை நிர்மாணிப்பதற்கு 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவில் கழிவறைக் கூடங்களை நிர்மாணிப்பதற்கான இடத்தினை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை இன்று (12) மேற்கொள்ளப்பட்டது.சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்பி வருகின்ற ஓர் இடமாக இருந்தாலும், நீண்ட காலமாக, அடிப்படை வசதிகள் இன்றி, கவனிப்பாரற்ற நிலையிலே இந்தப் பொழுது போக்கு பூங்கா காணப்பட்டு வந்தது.இந்த நிலையில், கிண்ணியா நகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஈ. எம்.ராபியின் வேண்டுகோளுகிணங்க, குறித்த பகுதியில் கழிவறைக் கூடங்களை அமைக்க 30 மில்லியன் ரூபா நிதியினை சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.எதிர்காலத்தில், நிலாவெளி, பளிங்கு கடற்கரை ஆகியவற்றோடு, கிண்ணியா கடற்கரை பூங்காவையும் உல்லாச பயணிகளை மேலும் கவரும் வண்ணம், நவீன வடிவில் மாற்றி அமைக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்தார்.குறித்த விஜயத்தில் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.