அராலி பாலத்தில் இருந்து அராலி அம்மன் கோவில் நோக்கி செல்லும் 789 பேருந்து வழித்தட வீதியில் உள்ள மதகு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.
குறித்த மதகில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வீதியில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. குறித்த வீதியால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.
குறித்த அதே மதகு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் சேதமடைந்திருந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்த நிலையில் உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது.
இருப்பினும் திருத்த வேலைகள் தரமற்று இடம்பெற்றதால் மீண்டும் அதே பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக காணப்படுகின்றது.
எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து குறித்த மதகினை சீரமைத்து, ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் 789 வழித்தட வீதி - உடனடியாக திருத்தம் செய்யுமாறு மக்கள் கோரிக்கை அராலி பாலத்தில் இருந்து அராலி அம்மன் கோவில் நோக்கி செல்லும் 789 பேருந்து வழித்தட வீதியில் உள்ள மதகு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.குறித்த மதகில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வீதியில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. குறித்த வீதியால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.குறித்த அதே மதகு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் சேதமடைந்திருந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்த நிலையில் உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் திருத்த வேலைகள் தரமற்று இடம்பெற்றதால் மீண்டும் அதே பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக காணப்படுகின்றது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து குறித்த மதகினை சீரமைத்து, ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.