• Aug 12 2025

மொரட்டுவையில் தீவிரமாகப் பரவும் சரும நோய்: சுகாதாரத்துறை தீவிர கவனம்

Chithra / Aug 12th 2025, 12:26 pm
image

 

மொரட்டுவைப் பிரதேசத்தில் எகொட உயன சுகாதார மருத்துவர் பிரிவில் கடந்த ஆறு மாத காலத்தினுள் 23 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொழுநோயாளிகளில் ஆறு பேர் சிறுவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக இன்னும் 31 பேர் ஒருவகையான சரும வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் தொழுநோயாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த நோயாளிகளுக்கு தொழுநோய் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மொரட்டுவைப் பிரதேசத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கும் குறித்த சரும வியாதி தொடர்பில் சுகாதாரத்துறையினர் தற்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.  

மொரட்டுவையில் தீவிரமாகப் பரவும் சரும நோய்: சுகாதாரத்துறை தீவிர கவனம்  மொரட்டுவைப் பிரதேசத்தில் எகொட உயன சுகாதார மருத்துவர் பிரிவில் கடந்த ஆறு மாத காலத்தினுள் 23 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த தொழுநோயாளிகளில் ஆறு பேர் சிறுவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.அதற்கு மேலதிகமாக இன்னும் 31 பேர் ஒருவகையான சரும வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் தொழுநோயாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.குறித்த நோயாளிகளுக்கு தொழுநோய் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மொரட்டுவைப் பிரதேசத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கும் குறித்த சரும வியாதி தொடர்பில் சுகாதாரத்துறையினர் தற்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement