• Aug 12 2025

NPP யின் பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சஜித் தயார் !

shanuja / Aug 12th 2025, 10:28 am
image

தேசிய மக்கள் சக்தியின் முற்போக்கான பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார். 

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுப்ரீம்சாட் நாடகத்தால் அதிர்ந்து விட்டது போல் தெரிகிறது. 

 

தேவை ஏற்பட்டால், அரசாங்கத்தில் உள்ள முற்போக்கான பிரிவுகளுடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக உள்ளார்.

 

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் முயற்சி, பிரதமர் ஹரிணி அமரசூரியவை சிக்கலில் சிக்க வைத்து, அவர் ஒரு திறமையற்றவர் என்பதைக் காட்டுவதாக இருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

NPP யின் பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சஜித் தயார் தேசிய மக்கள் சக்தியின் முற்போக்கான பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுப்ரீம்சாட் நாடகத்தால் அதிர்ந்து விட்டது போல் தெரிகிறது.  தேவை ஏற்பட்டால், அரசாங்கத்தில் உள்ள முற்போக்கான பிரிவுகளுடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக உள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்கவின் முயற்சி, பிரதமர் ஹரிணி அமரசூரியவை சிக்கலில் சிக்க வைத்து, அவர் ஒரு திறமையற்றவர் என்பதைக் காட்டுவதாக இருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement