• Apr 25 2026

11 ஈரானிய கப்பல்களை மூழ்கடித்து அமெரிக்கா; தீவிரமடையும் போர்!

Chithra / Mar 3rd 2026, 8:00 am
image

 

ஓமான் வளைகுடாவில் ஈரானுக்கு சொந்தமான 11 கப்பல்களைத் தாம் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தெரிவித்துள்ளது.


அத்துடன் குறித்த பகுதியில் ஈரானிடம் எவ்வித கப்பல்களும் எஞ்சியிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,


இரண்டு நாட்களுக்கு முன்பு ஓமான் வளைகுடாவில் ஈரானிய ஆட்சியிடம் 11 கப்பல்கள் இருந்தன, ஆனால் இன்று அது பூச்சியமாக (ZERO) உள்ளது.


ஈரானிய ஆட்சி பல தசாப்தங்களாக ஓமான் வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு தாக்குதல்களையும் நடத்தி வந்தது. அந்த நாட்கள் இனி முடிந்துவிட்டன.


கடல்சார் பயண சுதந்திரமானது 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார செழிப்பிற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.


அமெரிக்கப் படைகள் அதனைத் தொடர்ந்து பாதுகாக்கும் என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளது.


இதேவேளை  ஈரானிய ஆட்சியினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்காக, ஈரான் நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து பாரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


ஈரான் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததோடு, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கைவிட மறுத்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார் 


ஈரானின் ஏவுகணைத் திட்டமானது, அவர்களின் அணு ஆயுத மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். 


அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்ட ஒரு ஈரானிய ஆட்சி, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்க மக்களுக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

11 ஈரானிய கப்பல்களை மூழ்கடித்து அமெரிக்கா; தீவிரமடையும் போர்  ஓமான் வளைகுடாவில் ஈரானுக்கு சொந்தமான 11 கப்பல்களைத் தாம் மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தெரிவித்துள்ளது.அத்துடன் குறித்த பகுதியில் ஈரானிடம் எவ்வித கப்பல்களும் எஞ்சியிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,இரண்டு நாட்களுக்கு முன்பு ஓமான் வளைகுடாவில் ஈரானிய ஆட்சியிடம் 11 கப்பல்கள் இருந்தன, ஆனால் இன்று அது பூச்சியமாக (ZERO) உள்ளது.ஈரானிய ஆட்சி பல தசாப்தங்களாக ஓமான் வளைகுடாவில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு தாக்குதல்களையும் நடத்தி வந்தது. அந்த நாட்கள் இனி முடிந்துவிட்டன.கடல்சார் பயண சுதந்திரமானது 80 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார செழிப்பிற்கு அடித்தளமாக இருந்து வருகிறது.அமெரிக்கப் படைகள் அதனைத் தொடர்ந்து பாதுகாக்கும் என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளது.இதேவேளை  ஈரானிய ஆட்சியினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்காக, ஈரான் நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து பாரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததோடு, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கைவிட மறுத்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார் ஈரானின் ஏவுகணைத் திட்டமானது, அவர்களின் அணு ஆயுத மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்ட ஒரு ஈரானிய ஆட்சி, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்க மக்களுக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement