• Jun 26 2024

தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை பரிதாப மரணம்! இலங்கையில் பெரும் துயரம்

Chithra / Jun 17th 2024, 12:55 pm
image

Advertisement

 

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில் தலையில் தேங்காய் விழுந்து 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

குறித்த குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்,

அங்கிருந்து உடனடியாக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

குழந்தை அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை பரிதாப மரணம் இலங்கையில் பெரும் துயரம்  கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில் தலையில் தேங்காய் விழுந்து 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்,அங்கிருந்து உடனடியாக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.குழந்தை அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement