• Jun 26 2024

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி - பலமுறை கத்தியால் குத்திய கொடூரம்

Chithra / Jun 17th 2024, 12:49 pm
image

Advertisement

  

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த மற்றுமொரு இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

41 வயதுடைய இலங்கையரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலியின் கராபினியேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் மாலை ஒருவர்  காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில்  பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரை பொலிஸார்  பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு  கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இத்தாலியில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த 41 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி - பலமுறை கத்தியால் குத்திய கொடூரம்   இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த மற்றுமொரு இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.41 வயதுடைய இலங்கையரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலியின் கராபினியேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றுமுன்தினம் மாலை ஒருவர்  காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.இதன்போது, 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில்  பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.காயமடைந்தவரை பொலிஸார்  பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு  கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக இத்தாலியில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த 41 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement