• Nov 22 2024

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள்..!

Chithra / Jul 7th 2024, 7:48 am
image

 

இணைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் நேற்று நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் ஐக்கிய அரபு எமிரேட் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அந்நாட்டு இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், 

இணையவழி மோசடி மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்களும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்களும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் இலங்கைக்கு வந்ததன் பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள்.  இணைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில்  இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.அவர்கள் நேற்று நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் ஐக்கிய அரபு எமிரேட் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, அந்நாட்டு இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணையவழி மோசடி மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்களும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்களும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த குழுவினர் இலங்கைக்கு வந்ததன் பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement