நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3348 குடும்பங்களை சேர்ந்த 11170 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது
பதுளை மாவட்டத்தில் 575 குடும்பங்களைச்சேர்ந்த 1918 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.1064 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 273 குடும்பங்களை சேர்ந்த 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 37 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 குடும்பங்களை சேர்ந்த 7783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 1 வீடு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 1 நபர் காணாமல் போயுள்ளார்.
வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 1 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பகுதியளவில் 1 வீடு சேதமடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளது.27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11170 பேர் பாதிப்பு. இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3348 குடும்பங்களை சேர்ந்த 11170 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது பதுளை மாவட்டத்தில் 575 குடும்பங்களைச்சேர்ந்த 1918 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.1064 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 75 குடும்பங்களை சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 58 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.கேகாலை மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் 273 குடும்பங்களை சேர்ந்த 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 37 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 குடும்பங்களை சேர்ந்த 7783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 1 வீடு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 1 நபர் காணாமல் போயுள்ளார்.வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 1 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பகுதியளவில் 1 வீடு சேதமடைந்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியளவில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளது.27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.