• Jun 01 2024

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர்..!

Chithra / Jan 10th 2024, 9:40 am
image

Advertisement



ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு ஒன்றின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் குழுவொன்றின் வீசா காலம் நிறைவடைந்துள்ள போதிலும் அங்கு தொடர்ந்தும் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே அந்த நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது பிரச்சினைகளுக்கு அரசாங்கமோ அல்லது இலங்கைத் தூதரகமோ இதுவரை  தீர்வு காணாத பின்னணியில், 

இது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விடுதிகளில் இருந்து ஆண்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பெண்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர். ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு ஒன்றின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் குழுவொன்றின் வீசா காலம் நிறைவடைந்துள்ள போதிலும் அங்கு தொடர்ந்தும் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே அந்த நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களது பிரச்சினைகளுக்கு அரசாங்கமோ அல்லது இலங்கைத் தூதரகமோ இதுவரை  தீர்வு காணாத பின்னணியில், இது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விடுதிகளில் இருந்து ஆண்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பெண்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement