• Oct 31 2026

12 கோடி ரூபாய் கையூட்டல் விவகாரம் – ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

Chithra / Oct 30th 2026, 3:59 pm
image


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு உதவுவதற்காக 12 கோடி ரூபாய் கையூட்டல் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த மூவரின் பிணையை ரத்து செய்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மீளாய்வு மனுக்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில் இன்று (30) குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, மனுக்கள் ஊடாகக் கோரப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் இன்றைய தினம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டப் பணிப்பாளர் உதவியாளர் அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த மனுக்கள் தொடர்பான பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியும், மனுதாரர்களின் பதில் ஆட்சேபனைகளை நவம்பர் மாதம் 28ஆம் திகதியும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அதற்கமைய, சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பிணையை ரத்து செய்யக் கோரும் மூன்று மீளாய்வு மனுக்களும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

12 கோடி ரூபாய் கையூட்டல் விவகாரம் – ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு உதவுவதற்காக 12 கோடி ரூபாய் கையூட்டல் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த மூவரின் பிணையை ரத்து செய்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மீளாய்வு மனுக்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில் இன்று (30) குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது, மனுக்கள் ஊடாகக் கோரப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் இன்றைய தினம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டப் பணிப்பாளர் உதவியாளர் அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, குறித்த மனுக்கள் தொடர்பான பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியும், மனுதாரர்களின் பதில் ஆட்சேபனைகளை நவம்பர் மாதம் 28ஆம் திகதியும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.அதற்கமைய, சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பிணையை ரத்து செய்யக் கோரும் மூன்று மீளாய்வு மனுக்களும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement