• May 02 2024

பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் துயரம்

Chithra / Jan 24th 2024, 8:31 am
image

Advertisement

 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாட்களான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று  முன்தினம் (22) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 13 நாட்கள் கொண்ட அஜித்குமார் அனோஜினி என்ற பெண் பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு சம்பவ தினமான நேற்று முன்தினம் மாலை தாயார் தாய்ப்பால் வழங்கிய நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது

இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது,

அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகாக ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சடலம் நேற்று (23)  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழப்பு. தமிழர் பகுதியில் துயரம்  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாட்களான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.நேற்று  முன்தினம் (22) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 13 நாட்கள் கொண்ட அஜித்குமார் அனோஜினி என்ற பெண் பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு சம்பவ தினமான நேற்று முன்தினம் மாலை தாயார் தாய்ப்பால் வழங்கிய நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதுஇதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது,அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகாக ஒப்படைத்தனர்.இந்நிலையில் சடலம் நேற்று (23)  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement