• Mar 17 2026

கொழும்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Chithra / Feb 12th 2026, 7:43 pm
image

  

கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குலான பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 13820 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது   கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அங்குலான பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 13820 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement