• Apr 17 2026

உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாவிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Aathira / Feb 28th 2026, 10:10 am
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூபா 130 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்  தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம்  பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக  அந்நிய செலாவணியையும் ஈட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு நேற்றைய தினம் சென்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஓலாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களை பார்வையிடும் போது, கிராம மட்ட அமைப்புக்களோடு உரையாடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, மணல்காடு ஓலாந்தர் கால டச்சு தேவாலயத்திற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, மானிப்பாய் பிரதேசத்தில் பல அழகான இடங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை வட்டரா உறுப்பினர் அகஸ்டின், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமல், பிரஜா சக்தி தலைவர் மற்றும் நிர்வாகிகள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாவிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூபா 130 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன்  தெரிவித்துள்ளார்.மேலும் இதன் மூலம்  பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக  அந்நிய செலாவணியையும் ஈட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு நேற்றைய தினம் சென்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஓலாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களை பார்வையிடும் போது, கிராம மட்ட அமைப்புக்களோடு உரையாடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, மணல்காடு ஓலாந்தர் கால டச்சு தேவாலயத்திற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, மானிப்பாய் பிரதேசத்தில் பல அழகான இடங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை வட்டரா உறுப்பினர் அகஸ்டின், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமல், பிரஜா சக்தி தலைவர் மற்றும் நிர்வாகிகள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement