• Apr 04 2025

வவுனியாவில் 15 கிலோ கஞ்சா மீட்பு - மூவர் கைது

Thansita / Apr 3rd 2025, 9:50 pm
image

வவுனியாவில் 15 கிலோ கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் நெளுக்குளம் பொலிசாரிடம் விசேட அதிடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

வவுனியாவில் 15 கிலோ கஞ்சா மீட்பு - மூவர் கைது வவுனியாவில் 15 கிலோ கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் நெளுக்குளம் பொலிசாரிடம் விசேட அதிடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement