• Oct 11 2024

குளிக்கச் சென்ற 15 வயது மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

Chithra / Aug 25th 2024, 12:51 pm
image

Advertisement

 

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.

மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள்  வைக்கப்பட்டிருந்த நிலையில், குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குளிக்கச் சென்ற 15 வயது மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்  அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள்  வைக்கப்பட்டிருந்த நிலையில், குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement