• Dec 09 2024

ஹொரணையில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை! சிக்கிய சகோதரர்கள்

Chithra / Aug 25th 2024, 1:10 pm
image


ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரணையில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை சிக்கிய சகோதரர்கள் ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement