• Nov 15 2024

தேர்தல் நேரத்தில் 164 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு -பவ்ரல்

Anaath / Sep 21st 2024, 6:39 pm
image

இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்  பெருமளவிற்கு அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இதுவரை  164 தேர்தல் வன்முறைகளே  பதிவாகியுள்ளதாகவும்  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், தங்களிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 109 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் 55 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் அரசியல் கட்சியின் - வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்,தேர்தல் விதிமுறைகளிற்கு முரணாண விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுதல்,சட்டவிரோதமாக தேர்தல் அலுவலகங்களை பேணுதல்,வாக்காளர் மோசடி அதற்கான முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் 164 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு -பவ்ரல் இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்  பெருமளவிற்கு அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இதுவரை  164 தேர்தல் வன்முறைகளே  பதிவாகியுள்ளதாகவும்  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், தங்களிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 109 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் 55 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் அரசியல் கட்சியின் - வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்,தேர்தல் விதிமுறைகளிற்கு முரணாண விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுதல்,சட்டவிரோதமாக தேர்தல் அலுவலகங்களை பேணுதல்,வாக்காளர் மோசடி அதற்கான முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement