துணுக்காய் கல்விவலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப்பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்நிலைமைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நிச்சயமாக இந்த சிக்கல்நிலைரைத் தீர்ப்பதற்கு வடமாகாண கல்விஅமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடபட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை - நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து துணுக்காய் கல்விவலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப்பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்நிலைமைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.நிச்சயமாக இந்த சிக்கல்நிலைரைத் தீர்ப்பதற்கு வடமாகாண கல்விஅமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் வலியுறுத்தியிருந்தார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடபட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.