• Nov 22 2024

நேபாள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதால் 18 பேர் உயிரிழப்பு

Tharun / Jul 24th 2024, 7:05 pm
image

19 பேரை ஏற்றிச் சென்ற  சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேபாளத்தில் புறப்பட முற்பட்ட போது ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

விமானத்தில் இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்கள் பராமரிப்பு சோதனைகளுக்காக பொக்காரா நகருக்கு சென்றதாக விமான நிலைய பாதுகாப்பு தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி தெரிவித்தார்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு வெளியேறிய பின்னர் விமானம் "தீப்பிடித்தது" .விமானம் ஓடுபாதையில் இருந்து சிறிது மேலே பறந்து பின்னர் சாய்ந்து விபத்துக்குள்ளானதை தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காட்டுகின்றன.

 விமான விபத்தில் இறந்த 18  பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேபாளத்தில்  2000  ஆம் ஆம் ஆண்டு  முதல்  விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில்  சுமார் 350 பேர் இறந்துள்ளனர்.

நேபாள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதால் 18 பேர் உயிரிழப்பு 19 பேரை ஏற்றிச் சென்ற  சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேபாளத்தில் புறப்பட முற்பட்ட போது ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.விமானத்தில் இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 தொழில்நுட்ப வல்லுநர்கள் பராமரிப்பு சோதனைகளுக்காக பொக்காரா நகருக்கு சென்றதாக விமான நிலைய பாதுகாப்பு தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி தெரிவித்தார்.தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு வெளியேறிய பின்னர் விமானம் "தீப்பிடித்தது" .விமானம் ஓடுபாதையில் இருந்து சிறிது மேலே பறந்து பின்னர் சாய்ந்து விபத்துக்குள்ளானதை தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காட்டுகின்றன. விமான விபத்தில் இறந்த 18  பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.நேபாளத்தில்  2000  ஆம் ஆம் ஆண்டு  முதல்  விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில்  சுமார் 350 பேர் இறந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement