• Sep 20 2024

சோதனை என்ற பெயரில் 18 பெண்களுக்கு பாலியால் துன்புறுத்தல் - திரைப்பட பாணியில் நடந்த விசித்திர சம்பவம் - சிக்கிய 17 பேர்! SamugamMedia

Tamil nila / Mar 4th 2023, 5:10 pm
image

Advertisement

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சோதனை என்ற பெயரில் 18 பெண்களுக்கு பாலியால் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறி வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேருக்கு தர்மபுரி நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதிபதி வேல்முருகன் இன்று நேரடியாக வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் அவர் நேரில் விசாரித்தார்.



தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி எனும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தன.


இதையடுத்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.



இந்த சோதனையின்போது அவர்கள் அங்கு வசிக்கும் ஆண்கள், பெண்களை தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கடந்த 1992ல் நடந்த இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.


இதனால் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரினர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு சிபிஐ வசம் சென்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன்படி 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.


இவர்கள் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வழக்கின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதாக வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை மேற்கொள்வதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதன்படி இன்று நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட 18 பெண்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சோதனை என்ற பெயரில் 18 பெண்களுக்கு பாலியால் துன்புறுத்தல் - திரைப்பட பாணியில் நடந்த விசித்திர சம்பவம் - சிக்கிய 17 பேர் SamugamMedia தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சோதனை என்ற பெயரில் 18 பெண்களுக்கு பாலியால் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறி வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேருக்கு தர்மபுரி நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதிபதி வேல்முருகன் இன்று நேரடியாக வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் அவர் நேரில் விசாரித்தார்.தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி எனும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையின்போது அவர்கள் அங்கு வசிக்கும் ஆண்கள், பெண்களை தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கடந்த 1992ல் நடந்த இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரினர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு சிபிஐ வசம் சென்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என 17 பேரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே தண்டனைகள் வழங்கப்பட்டது. அதன்படி 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.இவர்கள் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வழக்கின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதாக வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை மேற்கொள்வதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதன்படி இன்று நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட 18 பெண்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement