• Dec 14 2024

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு!

Tharmini / Nov 27th 2024, 9:26 am
image

 நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம்  ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய  வீரரான பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை (13 வயது)  ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.

அத்துடன் ஒவ்வோர் அணியும் அதிகபட்சம் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்றும், அதற்கு 120 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 10 அணிகள் சார்பில் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 577 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்ச தொகையான 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.அதேசமயம்  ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய  வீரரான பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை (13 வயது)  ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.அத்துடன் ஒவ்வோர் அணியும் அதிகபட்சம் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்றும், அதற்கு 120 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 10 அணிகள் சார்பில் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 577 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement