• Nov 25 2024

வடக்கு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை - மன்னாரில் 1898 குடும்பங்கள் பாதிப்பு

Chithra / Oct 25th 2024, 7:58 am
image

 


மன்னார் மாவட்டத்தில் நேற்றுவரை   பெய்து வந்த  கடும் மழை காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த  7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்  மூன்று  இடைத்தங்கல்   முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மன்னார்  பிரதேச செயலகப் பிரிவில்  மொத்தமாக 1608 குடும்பங்கள் சார்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை,மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதேவேளை, நில்வளா கங்கையை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளுக்கு   வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, தல்கஹகொட மற்றும் பானடுகம ஆகிய பகுதிகளை அண்மித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடக்கு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை - மன்னாரில் 1898 குடும்பங்கள் பாதிப்பு  மன்னார் மாவட்டத்தில் நேற்றுவரை   பெய்து வந்த  கடும் மழை காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த  7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்  மூன்று  இடைத்தங்கல்   முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார்  பிரதேச செயலகப் பிரிவில்  மொத்தமாக 1608 குடும்பங்கள் சார்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை,மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும்.இதேவேளை, நில்வளா கங்கையை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளுக்கு   வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தல்கஹகொட மற்றும் பானடுகம ஆகிய பகுதிகளை அண்மித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement