• May 10 2026

யாழ் பல்கலைக்கழக பகிடிவதையில் 19 பேர் கைது !

Ziya / Nov 30th 2025, 11:09 am
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைதான 19 மாணவர்களும் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உசைன் உத்தரவிட்டுள்ளார்.


யாழ் பல்கலைக்கழக பகிடிவதையில் 19 பேர் கைது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.கைதான 19 மாணவர்களும் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உசைன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement