• Mar 09 2026

2025 T- 20 ஆசிய கிண்ணம் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

shanu / Sep 25th 2025, 9:57 am
image

2025 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 


நேற்று (24) நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், பங்களாதேஷ் அணியை 41 ஓட்டஙக்ள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இலங்கைக்கு எதிரான போட்டி மீதமிருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


 

இந்தியா நிர்ணயித்த 169 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி, 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 


 இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 


இதனால், அதிகாரபூர்வமாக இலங்கை நேற்று தொடரில் இருந்து வெளியேறியது.  இன்று (25) பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள சூப்பர் 4 போட்டியில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 T- 20 ஆசிய கிண்ணம் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா 2025 ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று (24) நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில், பங்களாதேஷ் அணியை 41 ஓட்டஙக்ள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இலங்கைக்கு எதிரான போட்டி மீதமிருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா நிர்ணயித்த 169 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி, 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.  இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால், அதிகாரபூர்வமாக இலங்கை நேற்று தொடரில் இருந்து வெளியேறியது.  இன்று (25) பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள சூப்பர் 4 போட்டியில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement