நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில்முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்புகளில் 1.3 கிலோகிராம் ஹெரோயின், 566 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 7 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,075 கஞ்சா செடிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 66 பேரை தடுத்து வைத்து விசாரணை நடாத்த உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 14 பேரின் சொத்து விபரங்களை பெற்றுக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், 226 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 2,166 பேர் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில்முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்புகளில் 1.3 கிலோகிராம் ஹெரோயின், 566 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 7 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,075 கஞ்சா செடிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் 66 பேரை தடுத்து வைத்து விசாரணை நடாத்த உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 14 பேரின் சொத்து விபரங்களை பெற்றுக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், 226 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.