• Apr 08 2025

மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

Chithra / Apr 7th 2025, 12:05 pm
image


கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது.

இதன்போது, 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் மாதத்தில் 39,212 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ரஷ்யா 29,177 சுற்றுலாப் பயணிகளுடன் பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாடு இலக்காகக் கொண்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை இதுவரை 722,276 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது.இதன்போது, 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.இதற்கிடையில், மார்ச் மாதத்தில் 39,212 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அதே நேரத்தில் ரஷ்யா 29,177 சுற்றுலாப் பயணிகளுடன் பின்தங்கியுள்ளது.இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாடு இலக்காகக் கொண்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை இதுவரை 722,276 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement