• Apr 07 2025

சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அரசியல் அறிவு தேவை! வஜிர சுட்டிக்காட்டு

Chithra / Apr 7th 2025, 12:29 pm
image


அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு விதிக்கும் வரி கொள்கைகள் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள, சர்வதேச அரசியல் குறித்து தெளிவான புரிதல் தேவை என்று முன்னாள்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இராஜாங்கத் தலைவர்களுக்கு சர்வதேச அரசியல் பற்றிய புரிதல் இல்லாவிட்டால், நாடு மிக விரைவில் ஆழ்ந்த நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு முன்பே அடையாளம் காண வேண்டியது அவசியம். அதற்காகவே அனுபவம் மிக முக்கியம். 

அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடக்கத்திலேயே பிரதமர் மோடியின் வருகை இலங்கைக்கு முக்கியம் என கூறியிருந்தார்.

மோடி 2019 இலும் இலங்கை விஜயம் செய்திருந்தார், சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இந்தியா எப்போதும் எங்கள் பக்கமாக இருந்து உதவி செய்த நாடாக திகழ்கின்றது.

ஜனாதிபதி ரணிலும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அரசியல் அறிவு தேவை வஜிர சுட்டிக்காட்டு அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு விதிக்கும் வரி கொள்கைகள் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள, சர்வதேச அரசியல் குறித்து தெளிவான புரிதல் தேவை என்று முன்னாள்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இராஜாங்கத் தலைவர்களுக்கு சர்வதேச அரசியல் பற்றிய புரிதல் இல்லாவிட்டால், நாடு மிக விரைவில் ஆழ்ந்த நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச அரசியலில் கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு முன்பே அடையாளம் காண வேண்டியது அவசியம். அதற்காகவே அனுபவம் மிக முக்கியம். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடக்கத்திலேயே பிரதமர் மோடியின் வருகை இலங்கைக்கு முக்கியம் என கூறியிருந்தார்.மோடி 2019 இலும் இலங்கை விஜயம் செய்திருந்தார், சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இந்தியா எப்போதும் எங்கள் பக்கமாக இருந்து உதவி செய்த நாடாக திகழ்கின்றது.ஜனாதிபதி ரணிலும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement