• Apr 07 2025

கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை மாற்ற வேண்டும்! அன்வர் நௌஷாட் கோரிக்கை

Chithra / Apr 7th 2025, 12:38 pm
image

 

இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனின் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லீம் சமூகம் அசௌகரியத்தில் உள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்கள் ஆறுதலடைய கூடிய சந்தர்ப்பம் வரலாம்  என சமூகம் சார் நடவடிக்கைகள் திறன் விருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையதலைவர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று நடைபெற்ற போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருளுடன் இருக்கின்ற உறவு இளைஞர்களுக்கு பாரிய பிரச்சினையாக  இருக்கின்றது.அரசியல் தலைமைகள் தங்கள் அதிகார கதிரைக்காக இளைஞர்களை பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது நீண்ட காலமான ஒரு குற்றச்சாட்டாக இருக்கின்றது.

ஆனால் இந்த நாட்டில் முதலாளித்துவத்தில் இருந்து சோசலீசமாக மாறுகின்ற போது இசசந்தர்ப்பத்தில் இவ்வதிகார கதிரை ஆசை முறியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குறித்த இளைஞர்கள் தேர்தல் வருகின்ற பொழுது அரசியல் கட்சிகளுடன் இணைந்து தங்களது செயல்களை மறைப்பதற்காக தூண்டப்படுகின்றார்கள்.

ஆனால் இவற்றை நிறுத்துவதற்கு எதிர்வரும் தேர்தல் முடிவு சான்றிதழ் அளிக்கும் என நினைக்கின்றேன்.

மக்களின் எதிர்பார்ப்பு என்பது போதைப்பொருளுக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒரு கோரிக்கையாக மாறியுள்ளது.

அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் ஊழல்களை ஒழிக்கின்றார்கள் என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். அதேபோன்று போதையை ஒழிக்க வேண்டும் என அனைவரும் ஒன்றாக பயணிக்கின்றார்கள். இதில் அரசியல் பேதமில்லை.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் விசேடமாக முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ளுர் வளங்களை கொண்டு  ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

அதே போன்று கிழக்கு மக்களை அடிமைகளாக்ககின்ற சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக இந்த சிவில் சமூகம் முழுமையாக குரல் கொடுக்கும் என்பதை இவ்விடத்தில் உறுதியாக கூறமுடியும்.

அரசாங்கம் தொடர்பில் முஸ்லீம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன.  அதாவது இவ்வரசாங்கத்தில் முஸ்லீம் சமூகத்தினருக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை. இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு.

இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லீம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது. இது தவிர பலஸ்தீன் காசா விடயத்தில் இந்த அரசாங்கத்தின் தெளிவினை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என தெரிவித்தார்.

கிழக்கு மக்களை அடிமைகளாக்கும் சித்தாந்தங்களை மாற்ற வேண்டும் அன்வர் நௌஷாட் கோரிக்கை  இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனின் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லீம் சமூகம் அசௌகரியத்தில் உள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்கள் ஆறுதலடைய கூடிய சந்தர்ப்பம் வரலாம்  என சமூகம் சார் நடவடிக்கைகள் திறன் விருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையதலைவர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாட் தெரிவித்தார்.உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று நடைபெற்ற போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.போதைப்பொருளுடன் இருக்கின்ற உறவு இளைஞர்களுக்கு பாரிய பிரச்சினையாக  இருக்கின்றது.அரசியல் தலைமைகள் தங்கள் அதிகார கதிரைக்காக இளைஞர்களை பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது நீண்ட காலமான ஒரு குற்றச்சாட்டாக இருக்கின்றது.ஆனால் இந்த நாட்டில் முதலாளித்துவத்தில் இருந்து சோசலீசமாக மாறுகின்ற போது இசசந்தர்ப்பத்தில் இவ்வதிகார கதிரை ஆசை முறியடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குறித்த இளைஞர்கள் தேர்தல் வருகின்ற பொழுது அரசியல் கட்சிகளுடன் இணைந்து தங்களது செயல்களை மறைப்பதற்காக தூண்டப்படுகின்றார்கள்.ஆனால் இவற்றை நிறுத்துவதற்கு எதிர்வரும் தேர்தல் முடிவு சான்றிதழ் அளிக்கும் என நினைக்கின்றேன்.மக்களின் எதிர்பார்ப்பு என்பது போதைப்பொருளுக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒரு கோரிக்கையாக மாறியுள்ளது.அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் ஊழல்களை ஒழிக்கின்றார்கள் என்ற நேர்கோட்டில் அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். அதேபோன்று போதையை ஒழிக்க வேண்டும் என அனைவரும் ஒன்றாக பயணிக்கின்றார்கள். இதில் அரசியல் பேதமில்லை.தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் விசேடமாக முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ளுர் வளங்களை கொண்டு  ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.அதே போன்று கிழக்கு மக்களை அடிமைகளாக்ககின்ற சித்தாந்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் மாற்ற வேண்டும்.அதற்காக இந்த சிவில் சமூகம் முழுமையாக குரல் கொடுக்கும் என்பதை இவ்விடத்தில் உறுதியாக கூறமுடியும்.அரசாங்கம் தொடர்பில் முஸ்லீம் சமூகத்தினரிடம் பல விடயங்களில் அதிருப்திகள் இருக்கின்றன.  அதாவது இவ்வரசாங்கத்தில் முஸ்லீம் சமூகத்தினருக்கான உரிய இடம் வழங்கப்படவில்லை. இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு.இவ்விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டினால் முஸ்லீம் சமூகம் ஏமாந்த நிலையில் உள்ளது. இது தவிர பலஸ்தீன் காசா விடயத்தில் இந்த அரசாங்கத்தின் தெளிவினை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement