• Jun 17 2024

இந்தியாவில் பயங்கர தீ விபத்து - 24 பேர் பலி

Tamil nila / May 26th 2024, 6:35 am
image

Advertisement

இந்தியாவில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று  சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று  மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

மேலும் தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் பயங்கர தீ விபத்து - 24 பேர் பலி இந்தியாவில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளனர்.இதில் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று  சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று  மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.மேலும் தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement