• Oct 19 2024

கல்லூரி இறுதி நாள் கொண்டாட்டத்தில் இடிந்து விழுந்த தரைதளம்: குழிக்குள் விழுந்த 25 மாணவர்கள்! samugammedia

Tamil nila / Apr 4th 2023, 1:06 pm
image

Advertisement

பெரு நாட்டில் கல்லூரி இறுதி தினத்தில் மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்த போது தரை தளம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 25 பேர் குழிக்குள் சரிந்தனர்.


பொதுவாக கல்லூரி இறுதி தினம் என்றால், மாணவர்கள் ஆடல்,பாடல் என பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.இவ்வாறு சமீபத்தில் பெரு நாட்டின் சான் மார்ட்டின் பகுதியில், தங்கள் கல்லூரியின் இறுதி நாளில் பட்டம் பெற்றதை மாணவர்கள் கூட்டம் ஒன்று கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.அப்போது ஆண்கள், பெண்கள் என பல பேர் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென தரை தளம் இடிந்து உள்ளே சென்றது.


இதில் 25 மாணவர்கள் வரை குழிக்குள் விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இன்றி சிறிய காயங்களுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ முதலில் டிக்-டாக்கில் பதிவேற்றப்பட்ட நிலையில், பின் அது ட்விட்டரில் பரவ தொடங்கியது.சமூக ஊடகத்தில் வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, இதுவரை இந்த வீடியோ 855k லைக்குகளையும், 8k கமெண்ட்களையும் பெற்றுள்ளது. 

கல்லூரி இறுதி நாள் கொண்டாட்டத்தில் இடிந்து விழுந்த தரைதளம்: குழிக்குள் விழுந்த 25 மாணவர்கள் samugammedia பெரு நாட்டில் கல்லூரி இறுதி தினத்தில் மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்த போது தரை தளம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 25 பேர் குழிக்குள் சரிந்தனர்.பொதுவாக கல்லூரி இறுதி தினம் என்றால், மாணவர்கள் ஆடல்,பாடல் என பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.இவ்வாறு சமீபத்தில் பெரு நாட்டின் சான் மார்ட்டின் பகுதியில், தங்கள் கல்லூரியின் இறுதி நாளில் பட்டம் பெற்றதை மாணவர்கள் கூட்டம் ஒன்று கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.அப்போது ஆண்கள், பெண்கள் என பல பேர் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென தரை தளம் இடிந்து உள்ளே சென்றது.இதில் 25 மாணவர்கள் வரை குழிக்குள் விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இன்றி சிறிய காயங்களுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ முதலில் டிக்-டாக்கில் பதிவேற்றப்பட்ட நிலையில், பின் அது ட்விட்டரில் பரவ தொடங்கியது.சமூக ஊடகத்தில் வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, இதுவரை இந்த வீடியோ 855k லைக்குகளையும், 8k கமெண்ட்களையும் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement