• Apr 02 2025

25 ரயில் சேவைகள் திடீர் இரத்து!

Chithra / Mar 30th 2024, 8:16 am
image

கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றைய தினம் 25 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் ரயில் சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.


25 ரயில் சேவைகள் திடீர் இரத்து கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.இதற்கமைய கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றைய தினம் 25 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் ரயில் சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now