• Jan 10 2025

திருகோணமலையில் மீட்கப்பட்ட 254 துப்பாக்கி ரவைகள்!

Chithra / Jan 8th 2025, 12:43 pm
image


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நேற்று இரவு இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.   

நிலாவெளி, சாம்பல் தீவு வீதியில் சல்லி கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர், தனது காணியை, கூலி ஆட்கள் போட்டு துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே, இங்கு கருகிய நிலையில் பழைய தோட்டாக்கள் அடங்கிய பையொன்று இருப்பது தெரியவந்ததாகவும், இது குறித்து அருகில் உள்ள கடற்படை தளத்துக்கு அறிவித்ததாகவும் தெரியவருகின்றது.

பழைய T56 துப்பாக்கி தோட்டாக்கள் 245 உம், ரேஷர் துப்பாக்கி வெற்று தோட்டாக்கள் 03 உம், mpmg துப்பாக்கி தோட்டாக்கள் 06 உம் அந்தப் பைக்குள் அடங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்கள் குறித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

திருகோணமலையில் மீட்கப்பட்ட 254 துப்பாக்கி ரவைகள் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நேற்று இரவு இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.   நிலாவெளி, சாம்பல் தீவு வீதியில் சல்லி கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.காணி உரிமையாளர், தனது காணியை, கூலி ஆட்கள் போட்டு துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே, இங்கு கருகிய நிலையில் பழைய தோட்டாக்கள் அடங்கிய பையொன்று இருப்பது தெரியவந்ததாகவும், இது குறித்து அருகில் உள்ள கடற்படை தளத்துக்கு அறிவித்ததாகவும் தெரியவருகின்றது.பழைய T56 துப்பாக்கி தோட்டாக்கள் 245 உம், ரேஷர் துப்பாக்கி வெற்று தோட்டாக்கள் 03 உம், mpmg துப்பாக்கி தோட்டாக்கள் 06 உம் அந்தப் பைக்குள் அடங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த வெடிபொருட்கள் குறித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement