• Feb 02 2025

கம்பளையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Tharmini / Feb 1st 2025, 2:36 pm
image

கம்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டுள்ளது.

கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி கொண்ட கார்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது.  மேலும் குறித்த இடத்தில் இருந்த பழக்கடை வியாபார நிலையமும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கம்பளையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து கம்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டுள்ளது.கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி கொண்ட கார்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது.  மேலும் குறித்த இடத்தில் இருந்த பழக்கடை வியாபார நிலையமும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement