மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்பு போத்தல்களுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டன.
மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்புகளும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடியில் கசிப்புடன் 30 பேர் கைது மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்பு போத்தல்களுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்புகளும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.