• Jan 08 2025

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்த சேதங்களுக்கான நஸ்டஈடாக 3000 மில்லியன் ரூபா தேவை; மாவட்ட செயலாளர் கருத்து..!

Sharmi / Dec 24th 2024, 6:15 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கான நஸ்டஈடாக 3000மில்லியன் ரூபா தேவையெனவும் விவசாயம் தொடர்பான சேத விபரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலாளர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (24) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர்,  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விசேடமாக தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகாவினால் விவசாயிகள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு தொடர்ச்சியாக  மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.


மட்டக்களப்பில் வெள்ள அனர்த்த சேதங்களுக்கான நஸ்டஈடாக 3000 மில்லியன் ரூபா தேவை; மாவட்ட செயலாளர் கருத்து. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கான நஸ்டஈடாக 3000மில்லியன் ரூபா தேவையெனவும் விவசாயம் தொடர்பான சேத விபரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட செயலாளர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (24) இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர்,  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது விசேடமாக தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகாவினால் விவசாயிகள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.அத்தோடு தொடர்ச்சியாக  மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement