• Nov 28 2024

35 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பில் வாசஸ்தலங்கள்! மீள ஒப்படைக்காத 30 முன்னாள் எம்.பிக்கள்

Chithra / Nov 24th 2024, 7:59 am
image

 

இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவான 35 உறுப்பினர்கள், மாதிவெல வீடமைப்பு வளாகத்தில் வீட்டு வசதிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த இல்லங்களில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய இல்லங்கள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கே இந்த வளாகத்தில் வீட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, இந்த வளாகத்தில், 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


35 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பில் வாசஸ்தலங்கள் மீள ஒப்படைக்காத 30 முன்னாள் எம்.பிக்கள்  இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவான 35 உறுப்பினர்கள், மாதிவெல வீடமைப்பு வளாகத்தில் வீட்டு வசதிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.அந்த இல்லங்களில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய இல்லங்கள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கே இந்த வளாகத்தில் வீட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன.இதன்படி, இந்த வளாகத்தில், 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.அதன்படி நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement