வவுனியாவில் தேர்தல் தொடர்பில் 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (20.09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இவ் முறைப்பாடுகள் எவையும் பாரதூரமான முறைப்பாடுகள் இல்லை. சிறியளவிலான முறைப்பாடுகளே கிடைத்திருந்தன. எனினும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் தேர்தல் தொடர்பில் 36 முறைப்பாடுகள் வவுனியாவில் தேர்தல் தொடர்பில் 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (20.09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இவ் முறைப்பாடுகள் எவையும் பாரதூரமான முறைப்பாடுகள் இல்லை. சிறியளவிலான முறைப்பாடுகளே கிடைத்திருந்தன. எனினும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.